For Pongal Free dhoti, saris, providing: Ministers inaugurated

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் 7.52 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கும்பணியை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு1 விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் பணி துவக்க விழா மோகனூரில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி சுந்தரம், எம்எல்ஏக்கள் நாமக்கள் பாஸ்கர், சேந்தமங்கலம் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் விழாவில் இலவச வேட்டி சேலை வழங்கும் பணியை துவக்கி வைத்து, 50 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கியும், மொத்தம் 310 பயனாளிகளுக்கு ரூ.51,37,216 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் தாலுக்காவில் 50,155 சேலைகளும், 49,919 வேட்டிகளும், மோகனூர் தாலுக்காவில் 27,132 சேலைகளும், 26,811 வேட்டிகளும், சேந்தமங்கலம் தாலுக்காவில் 44,495 சேலைகளும், 44,310 வேட்டிகளும், ராசிபுரம் தாலுக்காவில் 75,882 சேலைகளும், 75,535 வேட்டிகளும், கொல்லிமலை தாலுக்காவில் 10,700 சேலைகளும், 10,690 வேட்டிகளும், திருச்செங்கோடு தாலுக்காவில் 71,222 சேலைகளும், 71,013 வேட்டிகளும், பரமத்தி வேலூர் தாலுக்காவில் 38,574 சேலைகளும், 38,099 வேட்டிகளும், குமாரபாளையம் தாலுக்காவில் 59,091 சேலைகளும், 59,091 வேட்டிகளும் என மொத்தம் 8 தாலுக்காவில் 3,77,251 சேலைகளும், 3,75,468 வேட்டிகளும் வழங்கப்படவுள்ளது.

அந்த விழாவினைத் தொடர்ந்து மோகனூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் வேலூர் சாலை முதல் செங்கத்துறை வரை ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மேம்பாட்டு பணியினையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பில் மினி ஆட்டோவினையும், ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் வளமீட்புக் கூடம், மண்புழு உரத்தொட்டி, சுற்றுசுவர், பாதுகாவலர் அறை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி உள்ளிட்டவை அமைத்தல் என மொத்தம் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் திட்டப்ப அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் டிஆர்ஓ பழனிச்சாமி, சப் கலெக்டர் கிராந்திகுமார் பதி, சமூகப்பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!