For poultry farms in Namakkal zone 2,600 tons bran from Chhattisgarh ; By train

Namakkal-Railway-Station

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு 2,600 டன் எடையுள்ள தவிடு சட்டீஷ்கர் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் தீவன மூலப்பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் சட்டீஷ்கர் மாநிலம் உத்தராப்பூர் பகுதியில் இருந்து 2,600 டன் தவிடு சரக்கு ரயிலில் நாமக்கல் கொண்டு வரப்பட்டது.

இந்த தவிடு மூட்டைகளை நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 150க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் ரயில்வே கூட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!