Megadadu Dam should not be built in Karnataka: For the first time wearing a black shirt, BJP in Perambalur
கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டபடும் என அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அக்கட்சியின் மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் பெரம்பலூரில் நிருபர்களிடம் தெரிவித்தாவது:
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று கூறி கர்நாடகாவில் புதியதாக வந்துள்ள காங்கிரஸ் அரசாங்கம் புதிய அணை கட்டுவதற்கான ஒரு அறிவிப்பு செய்திருக்கிறது. தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தபோதிலிருந்து காவிரி பிரச்சனை இருந்திருக்கிறது. அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி செய்த ஒவ்வொரு முறையும் இது சம்பந்தமான பிரச்சனை இருந்திருக்கிறது.
இப்படி பிரச்சினையினால் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகவிற்கும் பூசல் ஏற்பட்டு வருகிறது. பலமுறை கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை தாக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியம் தர வேண்டும் என்று சொன்ன 177 டிஎம்சி தண்ணீரை முறையாக கொடுத்திருக்கிறது . பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவேரி மேலாண்மை வாரியம் அமைத்து எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என கட்டளையிட்டார். அதுமட்டுமில்லாமல் 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டு உரிய அனுமதி பெற்று காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம் கூட்டி, கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு தான் மேகதாது அணையை கட்ட முடியும் என்ற ஆணையை பிறப்பித்தார்.
அப்போது இருந்த அமைச்சர் கஜேந்திர சிங் சர்வதையா, பிரதமர் கஜேந்திர சிங்கை அழைத்து காவிரியில் எந்த அணையும் கட்டக் கூடாது என்றும். அதற்கு நாம் எந்த ஒப்புதலும் தரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது 2023 இப்போது காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் அரசாங்கம் அங்கிருக்கின்ற மக்களையும் காங்கிரஸ் காரர்களையும் திருப்தி படுத்துவதற்காக தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாமல் அங்கு அணை கட்டுவோம் என அறிவித்து மேகதாது அணை கட்டுவதற்கு 900 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.
இதைப் பார்த்த பிறகு நம்முடைய தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர்கள் இதனைக் கேட்டு கொதித்து எழுந்திருக்க வேண்டும். தமிழகத்திற்கு வெளிச்சத்தை காட்டுவோம், விடியலை காட்டுவோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் அங்கு அணை கட்டுவது தவறு அணை கட்ட விட மாட்டோம் எனவும், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இங்கிருந்து அமைச்சர் துரைமுருகனை அனுப்பி வைத்து அங்கிருக்கிற அமைச்சரை சந்தித்து லெட்டர் கொடுக்கிறார்.
நாங்களும் காவிரி பிரச்சனை சம்பந்தமாக சென்று பார்த்து வந்திருக்கிறோம் என்று கூறிக் கொள்வதற்காக நடந்து கொள்கிறார்கள். திமுக அரசிற்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை, காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் முதலில் செழிக்க கூடிய ஊர் எதுவென்றால் முதல்வர் பிறந்து தவழ்ந்த திருவாரூர் ஊர் ஆகும். தான் பிறந்த ஊருக்கு, மாவட்டத்திற்கும் , மாநிலத்திற்கும் வஞ்சிக்கின்றார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலமான 1969 முதல் 1975ம் ஆண்டுக்குள் கபினி அனை, சியாமாநதி, சொர்ணநிதி, கரங்கி அணை என 4 அணை கட்டப்பட்டது. இதற்கு அப்போதிருந்த மத்திய அரசுடன் கைகோர்த்துக்கொண்டு கருணாநிதி தடுக்காமல் ஆதரவளித்தார். அதே போலத்தான் திமுக தற்போதும் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கால் மவுனம் காத்துக்கொண்டு, நாங்கள் மனு கொடுத்து இருக்கிறோம் என்று கூறுகிறார். தமிழகத்திற்கு எதிராக தண்ணீர் விடக்கூடாது என மேகத்தாது அணை கட்ட நினைக்கும் கர்நாடாக முதல்வருக்கு பெங்களூர் சென்று வாழ்த்து சொல்ல முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கின்ற கட்சிகள் மட்டும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டத்தை அங்கு நடத்திக் கொண்டு இது அனைத்து கட்சி கூட்டம் என்று சொல்கிறார்கள். இது எப்படி அனைத்து கட்சி கூட்டமாகும் ? பாட்னாவில் நடந்ததாக இருக்கட்டும், பெங்களூரில் நடப்பதாக இருக்கட்டும். இது எல்லாம் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இவர்கள் எல்லாம் போட்டிருக்கிற கூட்டம்.
உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை தலைவர்களும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி, எகிப்தினுடைய ஜனாதிபதி மற்ற நாட்டு அதிபர்கள் எல்லோரும் பிரதம மந்திரியை பார்த்து நீங்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மகுடம் சூட்டி விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது. மேகதாது அணை கண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணித்து கண்டிக்கிறோம் என தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.