For the third time, the Perambalur Amma restaurants are offering food at Rs. R.T. Ramachandran donated 2 lakhs!
பெரம்பலூரில் உள்ள இரண்டு அம்மா உணவகத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க மூன்றாவது தவணையாக 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை நகராட்சி ஆணையரிடம் குன்னம் எம்.எல்.ஏ.,வழங்கினார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஏழை, எளிய மக்கள் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்கனவே 4 லட்சம் ரூபாய் அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கு காலம் நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் தனது சொந்த பணத்திலிருந்து. மேலும் 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை மூன்றாவது முறையாக பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னனிடம் இன்று வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அம்மா உணவகத்திற்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ.,அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு பார்த்து, ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட கட்சியினர், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு, கட்டணமில்லாமல் உணவு வழங்க மூன்றாம் தவணையாக ரூ.2 லட்சத்திற்கான காகோலையை அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமசந்திரன், நகராட்சி ஆணையர் குமரிமன்னனிடம் வழங்கிய போது எடுத்தப்பபடம். அருகில், பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எம்.செல்வக்குமார், நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.