For those affected by the Chennai storm, On behalf of Plus Max founder DATO S PRAKADEESH KUMAR, Rs. 2 lakh worth of relief goods!
சென்னையில் புயல்மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பிளஸ் மேக்ஸ் நிறுவனர் டத்தோ பிரகதீஸ்குமார் சார்பில் ரூ2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர்.பல பகுதிகளில் பால், தண்ணீர், மளிகைப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணப் பொருட்களை சேகரித்து மொத்தமாக சென்னைக்கு அனுப்பி வைத்து வருகிறது. இந்நிலையில் டத்தோ.பிரகதீஸ்குமார் சார்பில் அரிசி, பெட்ஷீட், மளிகை பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் என ரூ2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணப் பொருட்கள் சென்னை புழுதிவாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
விளம்பரம்: