Fork Lift, Maintenance and Operating Training for Perambalur District Youth

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் டிவிஎஸ் லாஜிஸ்டிக் பயிற்சி மையத்தில் முன்தூக்கி குழசம Fork Lift பராமரிப்பாளர் மற்றும் இயக்குனர் பயிற்சியும், கிடங்கு மேலாளர் பயிற்சியும் முற்றிலும் இலவசமாக உணவு மற்றும் தங்குமிடத்துடன் இறையூர், ஓரகடம் எஸ்டேட் சென்னை – 602 105 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

பயிற்சியின் நிறைவில், டிவிஎஸ். லாஜிஸ்டிக் நிறுவனத்தில் ரூ.10500- துவக்க ஊதியம் ,ESI மற்றும் PF உடன் பணியமர்த்தப்படும். 10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 28 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் ஒளிப்பட நகல்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். மேலும்; விபரங்களுக்கு 7550022613, 9940199687 மற்றும் 044 4246 6600 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!