பெரம்பலூர் பழைய நகராட்சி அருகே உள்ள வானொலித் திடலில், பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் விளக்கப் பொதுக்கூட்டமும் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி தலைமையில் நடைபெற்றது. நகர மாணவரணி செயலாளர் என்.ராஜா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை எஸ்.இராஜேந்திரன், ஏழை எளியவர்கள் ஆயிரம் பேர்களுக்கு, தையல் எந்திரம், சலவைப்பெட்டி, சைக்கிள், மின்விசிறி, வேட்டி, வேலை உள்ளிட்டவைகளை வாழ்வாதாரம் மேம்பட வழங்கினார். இதில், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் , மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர் க.அறிவானந்தம், ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
மாநில மீனவரணி இணைச்செயலாளர் பி.தேவராஜன், முன்னாள் எம்.பிக்கள் மா.சந்திரகாசி, ஆர்.பி மருதைராஜா மாவட்ட பொருளாளர் பூவை.தா.செழியன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், மாவட்ட துணைச் செயலாளர் எம்.ராணி, மாவட்ட துணைச் செயலாளர் கு.லெட்சுமி, மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் நெய்க்குப்பை ஆர்.துரை, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள், நகர வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 14வது வார்டு பரமேஸ்வரி கருப்பணன் நன்றி கூறினார். முன்னதாக நடிகர் ஹாஜா ஷெரீப் கலைக்குழுவின் கலைநிகழச்சிகள் நடைபெற்றது.