Former Chief Minister J. Jayalalithaa Memorial Day on behalf of AIADMK in Namakkal
நாமக்கல்லில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 5 முறை தமிழக முதல்வர் என அரசியல் உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தவர் ஜெயலலிதா. திரையுலகில் தன் வாழ்க்கைப்பயணத்தைத் தொடங்கியவர்.
மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் கொடிக்கடிப்பறந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டுவந்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தவர் எம்.ஜி.ஆர். அவர் மறைவுக்குப் பின்பு 1991-ம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். 5 முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நாமக்கல் அதிமுக சார்பில் நேற்று அனுசரிக்கப்படுகிறது. நாமக்கல் திருச்சி ரோடு ரமேஷ் தியேட்டர் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜா, மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவில் குப்பம்பாளையம் கிளை செயலாளர் கலைச்செல்வன், வகுரம்பட்டி மேலவை பிரதிநிதி ராஜாரகுமான்,கொசவம்பட்டி இளைஞரணி கென்னடி, போலீஸ்காலனி கிளை செயலாளர் சந்திரன், விஜி, தர்மா, சிவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.