Former Chief Minister J. Jayalalithaa Memorial Day, the procession went silent tributes in perambalur
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம் சென்று மலரஞ்சலி செலுத்தினர்
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் , முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 30வது நாள் நினைவு தினத்தையொட்டி இன்று காலை வானொலித் திடலில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தனர். பின்னர், அங்கு அலங்கரிக்கப்ட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். கூடியிருந்த அதிமுகவினர் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் கொள்கைப்படியும், மக்காளால் நான், மக்களுக்காகவே நான், என்ற வாக்கிற்கிணங்க அதிமுகவை வழிநடத்தி செல்ல சூளுரை எடுத்து கொண்டனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.