Former Chief Minister J Jayalalithaa’s birthday party: In Perambalur, AIADMK District Secretary R.T. Ramachandran led the celebration.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று வெகு விமரிசையாக முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை 73 கிலோ கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடினர்.

இன்று காலை முதலே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராம கிளைக் கழக நிர்வாகிகள் கொடி கம்பங்களுக்கு அதிமுக கட்சியின் வர்ணம் பூசி புத்தம் புதிய கொடியை ஏற்றி, அலங்கரிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வணங்கியும் மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு லட்டு. ஜாங்கிரி, இனிப்பு மிட்டாய்கள், பொங்கல் வழங்கி, பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். மேலும், ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், அக்கட்சி தொண்டர்கள் துணிமணிகள், போர்வைகள், அறுசுவை உணவும் ஆங்காங்கே வழங்கினர்.

அதே போன்று பெரம்பலூர் நகரில் இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெ.ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு, மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி ஏற்பாடு செய்திருந்த 73 கிலோ கேக் வெட்டப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டது.

வழக்கறிஞர் அணி பிரிவு சார்பாக மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியும், இன்று பிறந்த 7 பெண் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் வீதம் 7 தங்க மோதிரமும்,
மாவட்ட அதிமுக சார்பிலும், மாவட்ட சிறுபான்மையினர் அணியினர் சார்பிலும் வழங்கப்பட்டது.

காமராஜர் வளைவு மற்றும் சங்கு திடலில் கொடியேற்றி இனிப்பும், பெரம்பலூர் நகரத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையத்திலும், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களின் சார்பிலும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொடி தோரணங்கள் கட்டி திருவிழாக்கோலம் கொண்டுள்ளது. ஆங்காங்கே கிராம் மற்றும் நகரங்களில் வார்டு தோறும் ஜெ.ஜெயலலிதாவின் புகழ் பாடல்கள் மைக் செட்டுகளில் ஒலித்து கொண்டு உள்ளது. பின்னர் வரும் நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தபட்டு, ஏழை எளிய மக்களுக்கு அதிமுக கட்சி தொண்டர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாநில பெண்கள் பாதுகாப்பு நாளை முன்னிட்டு குரும்பலூர் அரசு கல்லூரியில் உறுதிமொழி ஏற்பதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏவுமான ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன். சசிக்குமார், செல்வமணி, செந்துறை ரமேஷ், சந்திரகாசன், செல்வக்குமார் மற்றும் பேரூர் ரெங்கராஜ், செல்வராஜ், வினோத், ஆசாத், இணைச் செயலாளர் ராணி, துணைச் செயலாளர் கு.லட்சுமி, மகளிரணி ராஜேஸ்வரி, மாவட்ட விவசாய பிரிவு லாடபுரம் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜமால்முகமது, மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள், ஆலத்தூர் ஒன்றிய பேரவை செயலாளரும், ஜெமீன்ஆத்தூர் ஊராட்சித் தலைவருமான ஜி.சண்முகம், ஒன்றிப் பேரவை இணைச்செயலாளரும், கீழமாத்தூர் ஊராட்சித் தலைவருமான கே.பி.ராஜேந்திரன், ஒன்றியப் பேரவை இணைச் செயலாளரும், தொண்டப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான டி.செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சி.நாகராஜன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவரும், நிலவளவங்கி இயக்குனருமான என்.ராஜ்குமார், புஜங்கராயநல்லூர் எஸ்.செந்தில்குமார், எசனை ஊராட்சித் தலைவர் சத்யா பன்னீர்செல்வம், கோனேரிப்பாளையம் கலையரசிரமேஷ், கீழக்கரை பன்னீர்செல்வம், எசனை பன்னீர்செல்வம், மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!