Former Chief Minister Jayalalithaa’s picture removed from Perambalur Amma restaurants: Demand for removal of Former Chief Minister Karunanithi in government offices!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. 3 ரூபாயுக்கும், 5 ரூபாயுக்கும் ஏழை எளியவர்கள் சாப்பிடும் வகையில் இட்லி, சாம்பார், தயிர் சாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்தை கொண்டுவந்து தமிழகம் முழுதும் செயல்படுத்தினார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக தலைமையிலான ஆட்சியில், முன்னாள் முதலமைச்சரின் பெயர்கள் திட்டங்கள் மாற்றப்படாது அதே பெயரில் தொடரும் என தெரிவித்திருந்தார். ஆனால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை நீக்கியதோடு பச்சை கலரில் இருந்து கரு ஊதா நிறத்திற்கு புதிய பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர் கடும் கொதிப்படைந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ் நாடு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலினின் வாக்குறுதிக்கு நேர்மாறாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அம்மா உணவகங்களின் பெயர் பலகையில் இடம் பெற செய்ய வேண்டும். இல்லையெனில், அனைத்து அரசு அலுவலங்களிலும் வைக்கப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் படங்களையும் அகற்ற வேண்டும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும், அதிமுகவினர் ஆலோசித்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!