Former DMK MLA arrested in the Eastern Namakkal District DMK meeting Impeachment
நாமக்கல் : திமுகவைச் சேர்ந்த முன்னாள் பெண் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் உடையவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், நாமக்கல்லை சேர்ந்த திமுக பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏவுமான சரஸ்வதி சமூக வலைதளங்களில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறாக செய்தி பரப்பியதாக, பொய்க்குற்றம் சுமத்தி அவர் மீது நாமக்கல் போலீஸார் 5 பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து, அவரை உடனடியாக கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைச் செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, நகர பொறுப்பாளர் மணிமாறன், நகர செயலர் சங்கர், ஒன்றிய செயலர்கள் துரைசாமி, ஜெகநாதன், ராமசுவாமி, பாலசுந்தரம், கவுதம், துரைராமசாமி, பழனிவேல், பாலசுப்ரமணியன், முத்துசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.