Former MLA Tamil Selvan appointed as Perambalur ADMK District Secretary!
அஇஅதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா. தமிழ்ச்செல்வனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி நியமனம் செய்து உள்ளார்.
இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் 3 முறை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை எம்.எல்ஏ. ஆக வெற்றி வாகை சூடியவர். பள்ளி கல்லூரி காலத்தில் இருந்தே அதிமுகவில் தொடர்ந்து இருந்து வருகிறார். மாவட்ட மாணவரணி செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் பிரிவினைக்கு மத்தியில் ஆர்.டி ராமச்சந்திரன் விசுவாசத்திற்காக முன்னாள் அமைச்சர் அமைச்சர் வைத்திலிங்கம் வழியில் சென்றுவிட்ட பிறகு, பல்வேறு முன்னாள், இந்நாள் முக்கிய பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளருக்கு போட்டி போட்டு வந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மாவட்ட செயலாளராக வெற்றி பெற்றிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு பிரச்சனைகளிலும், போட்டிகளிலும் துவளாமல், துணிச்சலாக நின்ற பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நேர் எதிரான அரசியல் செய்வார் என பேசப்படுகிறது.
அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மாவட்ட செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வனுக்கு நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
விளம்பரம்: https://dsmatrimony.net/