Former army / Widows of information through the internet and can be uploaded

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் ஆகியோரின் பதிவுகள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, முன்னாள் படைவீரர்கள் / விதவைகள் தங்களின் 1.படைப்பணி விவரங்கள், 2. ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை எண், 3.ஆதார் எண், 4.வங்கி கணக்கு எண். வங்கி ஐஎப்எஸ்சி கோடு ஆகிய விவரங்களுடன்; தங்கள் புகைப்படத்தை JPEG//PNG//JPG வடிவத்தில் 2 எம்.பிக்கு மிகாமலும், படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பி.டி.எப் வடிவத்தில் 4-எம்.பிக்கு மிகாமல் ஸ்கேன் செய்து தாங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கணினி மையத்தில் www.esmwel.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்து அதன் விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் அரியலூர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்றால் அவர்களுக்கு online-ல் பதிவு செய்வது தொடர்பாக தகுந்த ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 72.ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329-221011 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!