Four arrested for plotting to take revenge 2 people running away! Perambalur police investigate
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்ப்புறம் ஏரியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் பேசிக் கொண்டிருந்த 6 பேரை மடிக்க பிடிக்க போலீசார் முயற்சித்தனர். அதில் இருவர் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட நான்கு பேரை தீவிர விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் அருகே உள்ள செல்வராஜ் மகள் விக்கி (எ) விக்னேஸ்வரன் டிரைவர் (வயது 26), பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் ( 20), பெரம்பலூர் நிர்மலா நகரை சேர்ந்த குமார் மகன் (24), என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியது, பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு பகுதியை சேர்ந்த முருகன் (20), கே.கே நகர் வினோத், ஆலம்பாடி சமத்துவபுரம் வினோத் ஆகிய இருவர் என்பதையும் உறுதிப்படுத்திய போலீசார் பிடிப்பட்ட 4 பேரையும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.