Four arrested for selling ganja at Perambalur
பெரம்பலூர் ரோவர் பள்ளி அருகே ஒரு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் நித்யா தலைமையில் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் அங்கு சட்டத்திற்கு விரோதமாக போதை பொருளான கஞ்சாவை, இரு சக்கர வாகனங்கனத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த செல்வகுமார் (29), அவரது மனைவி அஞ்சலி (27) ஆகிய இருவர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 3200 ரூபாய்
மதிப்புள்ள கஞ்சாவையும் ரொக்கம் ரூபாய் 5ஆயிரத்து 100-ம், அவர்கள் பயன்டுத்திய இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றி குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்று, பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஜயகோபலபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தியதில் தனியார் பட்டறை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கடலூரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றியோடு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.