Fourth Annual Sports Festival at Almighty Vidhyalaya Public School in Siruvachur near in Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் நான்காம் ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சாரதா செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். காலை 9 மணியளவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி பள்ளி வளாகத்தில் வந்து கொடி ஏற்றி விiளாயட்டு விழா துவக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் சி.கே.ஜெயதேவராஜ், திருச்சி எஸ்.ஆர்.சி.காலேஜ் உடற்கல்வி பேராசிரியர் டி.சுதாமதி, திருச்சி அத்லெடிக் அசோசியேசன் ஒருங்கினைப்பாளர் ரவிசங்கர், ரேயான் குரூப்ஸ் நிர்வாகி முஹய்தீன் அப்துல்காதர், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்ர்.
உடற்கல்வி போராசிரியர் பேசும்போது நம் குழந்தைகள் பிரபலங்கள் ஆவதற்கு அரசியல், சினிமாவைத் தவிர விளையாட்டு தான் அடுத்த ஆயுதம் என்றும் இன்று உடல் ஆரோக்கியம் பெற அனைத்து குழந்தைகளுக்கும் உடற்பயிற்சியுடன் கூடிய விளையாட்டு அவசியம் என்றும் எனவே பெற்றோர்கள் குழந்தைகளை விiளாயாட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
சிலம்பம், ஏரோபிக் டான்ஸ், ஹீப்ஸ்டிரில், பிளாக்டிரில், மற்றும் 100 மீ 200 மீ 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ஆசிரியைகள் சந்திரோதயம், ஜாய்ஷகிலா, ஹேமா, ஆசிரியர்கள் மணிகண்டன், தமிழ்செல்வன் உள்பட ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்ட