Fraud by claiming to get a job abroad: Perambalur cyber crime police who went to UP and arrested! Rs. 2.10 lakh money recovery!
பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2022-ம் வருடம் பிப்ரவரி மாதம், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் டவுன் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வயது 43 என்பவருக்கு துபாய்-ல் வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.6,23,952-யை வங்கி கணக்குகள் மூலம் பெற்று ஏமாற்றிவிட்டதாக பெரம்பலூர் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து 17.12.2022-ம் தேதி சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 09/22 U/S 420 IPC 66 D of IT Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், காவலர்கள் சதீஷ்குமார், திலிப்குமார், வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் குற்றவாளிகளை தேடி கடந்த 23.01.2023-ம் தேதி டெல்லி புறப்பட்டனர்.
டெல்லி மற்றும் உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆகிய இடங்களுக்கு சென்று விசாரணை செய்த பின்பு 29.01.2023-ம் தேதி உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோடா என்ற பகுதியில் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டதைச் சேர்ந்த பைய்க்குந்த் மிஷ்ரா மகன் விகாஸ் குமார் மிஷ்ரா (32), காமோத் ஜா மகன் மற்றும் கௌதம் குமார் ஜா (22) ஆகியோரை கைது செய்து , அவர்களிடமிருந்து ரூ.2,10,000-த்தை மீட்டுள்ளனர். மேலும் எதிரிகளிடமிருந்து 1 சிபியூ 5 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 14 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 5 பேங்க் செக்புக் போன்றவை கைப்பற்றப்பட்டு எதிரிகள் 30.01.2023-ம் தேதி உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைபர்கிரைம் தனிப்படை குழுவினர் பெரம்பலூர் வந்தடைந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், பொதுமக்கள் யாரும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் அனுப்பி வைக்க சொன்னலோ, பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் போன்றவற்றில் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.