Free Aari Embroidery Training for Women’s in Perambalur!
பெரம்பலூர் ஐஓபியின், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான ஆரிஎம்ப்ராய்டரி பயிற்சி வரும் 12-06-2024 ஆம் தேதி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
காலை 9.30மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியின் போது மதியஉணவு, காலை, மாலை தேனீர் வழங்கப்படும் . பயிற்சி முடிந்தவுடன் அரசால்அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 44 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண்அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை தொடர்பு கொண்டு, பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் வேலை அட்டை (குடும்பத்தில் எவரேனும்) 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பான் அட்டை ஆகியவற்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைத்து 11-06-2024 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.