Free Coaching Classes for Central Government Staff Examination: Perambalur Collector Call!
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள SSC MTS தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இலவச பயிற்சி வகுப்புகள் 07.02.2023 முதல் நடத்தப்பட உள்ளது.
SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள். 17.02.2023, தேர்வை பொறுத்தவரை 11,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது என்பதாலும், கல்வி தகுதி 10-ஆம் வகுப்பு என்பதாலும், மேலும் முதல்முறையாக தமிழிலும் தேர்வு எழுதலாம் என்பதாலும், பெண்கள் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் முற்றிலும் இலவசம் என்பதாலும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் அனைவரும் இத்தேர்விற்கு தவறாது (https://ssc.nic.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மேற்காணும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பயன்பெறுமாறும்,
இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறும், அலைபேசி வாயிலாக 9499055913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.