Free Coaching for Board Competitive Exams: Perambalur Collector Info!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC Staff Selection Committee) பல்வேறு பணிகளுக்காக நடத்தப்படும் CHSL CHSL என்ற தேர்விற்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-2 (TNPSC – GROUP II) முதன்மை தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் 16.12.2022 அன்று முதல் நடத்தப்படவுள்ளது.
SSC CHSL தேர்வை பொறுத்த வரை 4500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் இத்தேர்விற்கு தவறாது விண்ணப்பிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்றும்,
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறும், இது தொடர்பாக மேலும் விபவரங்களுக்கு 9499055913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.