Free costume jewelry production for village women of Perambalur district!
பெரம்பலூர் சங்கு பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஐ.ஓ.பி பேங்கின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பெண்களுக்கு காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, 13 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியின் போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
நகை வடிவமைப்பு – வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உள் புற வடிவமைப்பு, மூட்டு வடிவமைப்பு, நகைகளின் வெவ்வேறு பகுதிகளை அசெம்பிளிங் செய்து புதிய நகைகளை உருவாக்குதல், மோதிரம், நெக்லஸ் , வளையல்கள், சங்கிலி , ஸ்டெட் , டாலர்கள் செய்தல், டெரகோட்டா ,மணப்பெண் நகை அலங்கார செட், நகைகளை பேக்கிங் செய்யும் முறை மற்றும் விலை நிர்ணயம் செய்தல் ஆகியன கற்று தரப்பட உள்ளது.
வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படுவதாகவும், 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்கும் கிராம பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவர்கள், தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை,வங்கிபுத்தகம், ஆகியவற்றின் நகல் (2செட்) , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜுலை21ஆம் ஆம் தேதி நடக்க இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04328-277896, என்ற எண்ணிலோ +91 9488840328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.