பெரம்பலூரில் இலவச கண் மருத்துவ முகாம் 21-ந்தேதி நடக்கிறது

பெரம்பலூர் அரிமா சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், ஆதித்யா ஷாப்பிங் மால்,ஸ்ரீஆனந்த் ஜூவல்லர்ஸ், செந்தூர் மெடிக்கல்ஸ், ரேணுகா சில்க்ஸ் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் தெப்பக்குளம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 21-ந்தேதி நடக்கிறது.

முகாமிற்கு சங்கத்தலைவர் என்ஜினியர் செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். சங்கத்தின் சாசன தலைவர் மு.ராஜாராம் முன்னிலை வகிக்கிறார். முகாமை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு கண்புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் போன்ற குறைபாடுடைய பரிசோதனை செய்து சிகிக்சை அளிக்கின்றனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை அரிமா சங்க நிர்வாகிகள் பாபு, மகாதேவன், முரளி மற்றும் அரிவையர் சங்க நிர்வாகிகள் புஷ்பாமேரி, கலாவதி, லின்சி குழுவினர் செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!