Free Kidney Stone Surgery Camp at Perambalur Arputha Hospital; It was chaired by Dr. Samuel Devakumar.
பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை மற்றும் பேராயர் பால்ராஜ் சமூக நல அறக்கட்டளை சார்பில், பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள அற்புதா மருத்துவமனையில் இலவச சிறப்பு சிறுநீரக கற்களுக்கான மருத்துவ பரிசோதனை, அறுவை சிகிச்சை முகாம், மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சாமுவேல் தேவகுமார், தலைமையில் நடந்தது.
முகாமில், சிறுநீர் கற்கள், சிறுநீர் குழாய் கற்கள், நீர்ப்பை கற்கள், நீர்த்தாரையில் சதை அடைப்பு, தசை வளர்ச்சி ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அல்லை முதல் அடிவயிறு வரை வலி, சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் மற்றும் வலி, சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுதல், இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர். சிறப்பு சிறுநீரக அறுவை சிசிக்சை நிபுணர்கள் டாக்டர் சந்தோஷ், டாக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் இம்முகாமில் 200 க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டு, பரிசோதனைகள் செய்து கொண்டனர். 50 க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், முகாமில் சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது,
அற்புதா மருத்துவமனை கடந்த 19 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, சமூகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நோய் பிணிகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், வரும் நாட்களிலும், இன்னும் சில இலவச முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சாமுவேல்தேவக்குமார் தெரிவித்துள்ளார்.