Free law course entrance exam coaching for SC – ST students; Perambalur Collector Information.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழங்களில் சட்ட படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கான பயிற்சி ( Common Law Admission Test) இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 – 25 வயது நிரம்பிய பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் மற்றும் நடப்பாண்டில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவுத் தேர்விற்கான பயிற்சி( Common Law Admission Test) வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளுக்கான நேர்காணல் ( Interview) குழு விவாதம் (Group Discussion) எழுத்துத் தேர்வு(Written Ability Test) ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவினால் வழங்கப்படும்.

எனவே, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மற்றும் பயிலும் மாணாக்கர்கள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!