Free medical camp for cattle and goats on the 24th and 25th of Namakkal district
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் விடுத்துள்ள தகவல்:
தமிழக அரசு சார்பில் வழங்கப்படட விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றிற்கு கறவை பசுக்களின் பால் உற்பத்தித் திறனை பெருக்கவும், ஆடுகளின் எடையினை அதிகரிக்கவும், தமிழகம் முழுவதும் வரும் 24, 25 தேதிகளில் கறவைப் பசுக்களுக்கு, இனபெருக்க மருத்துவ பரிசோதனையும், ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடைபெற உள்ளது. விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.