Free painting training for the youth of Perambalur district!
பெரம்பலூர் ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு, பெயிண்டிங் பயிற்சி வரும் நவ.21 முதல் தொடங்க உள்ளது. பெயின்டிங் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அதன் முக்கியத்துவம்,அதன் வகைகள், கட்டிடம் மரம் மற்றும் உலோகம் ஆகியவற்றில் பெயிண்டிங்கிற்கு முன் செய்யப்பட வேண்டிய வேலைகள் ,மேற்பரப்பை தயார் செய்யும் முறைகள், ப்ரைமர், எனாமல் புட்டி மற்றும் சிமெண்ட் புட்டி ஆகியவற்றை பூசும் முறைகள், பெயின்டிங் செய்யும் பரப்பை கணக்கிட்டு அதற்கு ஆகும் செலவுகளை நிர்ணயிப்பது ஆகியன பற்றி துறை சார்ந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது .
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் 10 நாட்கள் நடக்கும், இப்பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம், தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 18.11.2022 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்கு பஸ் ஸ்டாப், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, என்ற எண்ணிலோ +91 94888 40328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.