Free Sewing Machines for Women : Perambalur Collector Information!

model

பெரம்பலூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கைம்பெண்கள், ஆதரவற்ற கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலம் இணையதளவழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பவர்கள் வருமானச்சான்று (வருட வருமானம் ரூ 72,000க்கு மிகாமல்), வயது வரம்பு 20-40க்குள் (கல்விச்சான்று அல்லது பிறப்பு சான்று), விதவையாயின் விதவை சான்று, கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று, தையல் பயிற்சி சான்று (குறைந்தது 6 மாத கால பயிற்சி முடித்திருக்க வேண்டும்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய சான்றுகளுடன் அரசு இசேவை மையங்களில், இணையதளவழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!