Free Tailoring Training for Women in Perambalur District!
பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தெரிவித்துள்ளதாவது:
பெண்களுக்கான தையல்கலை பயிற்சி இலவசமாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப் பாவாடை, யூனிபோர்ம் ஸ்கிர்ட், அரைக்கை சர்ட், யூனிபோர்ம் ட்ராயர் ,பேபி பிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் ஆகியன பற்றி சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.
காலை 9.30 மணி முதல்மாலை 5.00 மணி வரை 30 நாட்கள் வேலை நாட்களில் நடக்கும். காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில்சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்கதெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை. வங்கி கணக்கு புத்தகம் உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து மார்ச் 31 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள ஐஓபிகிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளளது.