Free toy making training for Perambalur district youth
பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி விடுத்துள்ள தகவல்:
கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் குறுகிய கால பொம்மை தயாரித்தல் பயிற்சி செப்.28 முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது
பயிற்சியின் காலஅளவு 13 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குபட்ட,எழுத படிக்க தெரிந்த,சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் பெரம்பலூர் சங்குப்பேட்டை வடபுறம் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்திலோ அல்லது 04328-277896, என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.