Free Training Camp on cellphone repair in Namakkal
இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மத்திய ஊரக வளச்சித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசாங்க பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் செல் போன் பழுதுபார்த்தல் தொழில் துவங்க இலவச சுயவேலைவாய்ப்பு தொழில் பயிற்சி துவங்கப்படவுள்ளது.
பொதுமக்களிடையே அதிக தேவையும், வரவேற்பும் உள்ளதால், அதிக லாப நோக்குள்ள இப்பயிற்சி பயன்படவுள்ளது. எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர், புதிய தொழில் முனைவோர் இப்பயிற்சியில் சேரலாம். வரும் ஜனவரி மாதம் பயிற்சி 30 முழுவேலை நாட்களாக இருக்கும்.
பயிற்சிக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் தொழில் முனைவோர்கள் 35 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே வரும் ஜனவரி 3ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த பயிற்சிக்கு குறைந்த பட்ச கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது மற்றும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சி செலவு, பயிற்சி பொருட்கள், உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.