Free Training Camp on Companion Fisheries: Namakkal Agricultural Science Centre Announcement
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 16ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு கூட்டு மீன்வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் மீன் பண்ணை அமைப்பு, மீன்குஞ்சு தேர்வு மற்றும் வளர்ப்பு, உணவு மேலாண்மை மற்றும் நோய்கள் தடுக்கும் முறைகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் படக்காட்சியுடன் பயிற்சி அளிக்கப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 15ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.