Free Training Course in Perambalur for Electricity, Wireman for CITU.
பெரம்பலூர்; ஜீலை 27.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கு 2900 நபர்களை எடுக்க டான்ஜெட்கோ முடிவு செய்து எழுத்து தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே மின்வாரியத்தில் உள்ள மின்ஊழியர் மத்தியஅமைப்பு சிஐடியு தொழிற்சங்கம் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் பயன்பெறும் நோக்கில் சேவை மனப்பாண்மையுடன் இலவச கள உதவியாளர் பதவிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் மாதம் வரை வராந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிமுதல் மதியம் 2 மணி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதையொட்டி முதல் நாள் வகுப்பு துவக்க விழா பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. வட்ட செயலாளர் கே.கண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் வி.தமிழ்செல்வன் வரவேற்றார். உதவி பொதுச்செயலாளா; கே.அருட்செல்வன் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
நிர்வாகிகள் கே.ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஒருங்கிணைப்பாளர் ஜே.ஆல்பர்ட் வாழ்த்துரை வழங்கினார்.
வட்ட துணைத் தலைவர்கள் ஆர்.கண்ணன் மணி, ஆர்.இராஜகுமாரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களை சேர்நத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 87 பேர் கலந்து கொண்டனர். முடிவில் பெரம்பலூர் கோட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.