Free Training Course in Perambalur for TET and Second Grade Police
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியர் தோ;வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளுக்கு வருகின்ற 26.04.2019 முற்பகல் முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை தினமும் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியின்போது இலவசமாக பயிற்சிக் குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகள் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுக்கும் ஒவ்வொரு வார புதன் கிழமைகளில் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.