Free Training Courses for Central Government Staff Selection Commission, and 2nd Level Constable Exam : Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 26.04.2023 முதல் நடத்தப்பட உள்ளது, என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான பணியிடத்திற்கு 7500 காலியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி 03.05.2023 ஆகும். இத்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தால் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதி இளநிலை பிரிவு பட்டம் என்பதாலும், பெண்கள் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் முற்றிலும் இலவசம் என்பதாலும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் அனைவரும் இத்தேர்விற்கு தவறாது (https://ssc.nic.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மேற்காணும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் 19.04.2023 முதல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் துவங்கப்பட்டுள்ளது. வேலை நாடுநர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேற்காணும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், அலைபேசி வாயிலாக 94990 55913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு, தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!