Free training in Perambalur for making appalam, pickles and spices!
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அப்பளம் ஊறுகாய் மசாலா பொடி தயாரிக்க, இலவச பயிற்சி வகுப்பு வருகிற நவம்பர் 15 ம் தேதி முதல் அளிக்கப்படுகிறது. வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
10 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிவிற்றுவிக்கப்படும். பயிற்சியின் போது, காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்கு பேருந்து நிறுத்தம், மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றுடன், குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோவுடன் விண்ணப்பத்துடன் இணைத்து வரும் நவம்பர் 15-ம் ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.