Free Training on carp fish farming in Namakkal: Agricultural Science Center
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும்13ம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு கெண்டைமீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சியி முகாமில் கெண்டைமீன் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு, வளர்ப்புக்கு ஏற்ற இடம் தேர்ந்தெடுத்தல், மீன் குளம் அமைத்தல், மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல், மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை, நீர் தர மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகியவை உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் விரிவாக கற்றுத்தரப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 12ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.