Free Training on Integrated Crop Protection Systems in Summer Cotton
கோடைக்கால பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 6 ம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு கோடைகால பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதில் தற்போது கோடை பருத்தியில் தண்டு கூடன் வண்டு, காய்புழுக்கள், சாறு ஊறிஞ்சும் பூச்சிகள் அதிகம் காணப்படுவதால், அதனை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்துதல் என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 5ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.