பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில், தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார வார விழா, இன்று முதல் முதல் வரும் ஜுலை – 3 ம் தேதி வரை குடிநீர் பாதுகாப்பு வாரம் பெரம்பலூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படவுள்ளது.
குடிநீரின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், குடிநீரை சிக்கனமாகப் பயன் படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையிலும், நீரின் தரத்தினை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் குடிநீர் பாதுகாப்பு வாரவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.
அதன்படி நாளை (ஜுலை -28) குடிநீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து நடைபெற உள்ளது.
இப்பேரணியில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
29.06.2016 அன்று மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர், அங்கன்வாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு குடிநீh; மாதிhp சேகாpப்பதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன் பிறகு தோ;வு செய்யப்பட்ட பள்ளி ஆசிhpயா;களுக்கு நீh; மாதிhpகளை தல ஆய்வு பெட்டிமூலம் பாpசோதிக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
29.06.2016 அன்று நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றிய அளவிலான விழிப்புணா;வு பேரணியும், 30.06.2016 அன்று அனைத்து ஊரகஃ உள்ளாட்சி மன்ற அளவிலான விழிப்புணா;வு பேரணியும் நடத்தப்படவுள்ளது.
01.07.2016 முதல் 03.07.2016 வரை அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு பேரூராட்சியில், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் குடிநீர் மாதிரிகள் சுமார் 3400 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீர் தரபரிசோதனை (காரதன்மை, அமிலதன்மை, கடினதன்மை, நைட்ரைட்டு, நைட்ரேட்டு, ஃபுளுரைடு, குளோரின், கால்சியம்) செய்யப்பட்டு குடிநீர் தரங்கள் உரிய பதிவேடுகளில் பதிவுசெய்யப்படும்.
குடிநீர் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்க வேண்டியதின் நோக்கம் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களின் தரத்தினை அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.
மாவட்டம் முழுவதும் ஊரகம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் நீர் ஆதாரத்தின் தரம் குறித்து தகவல் தயாரிக்கப்படும். குடிநீர் ஆதாரங்களின் தரத்தினை அனைவரும் எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் குடிநீர் வடிகால் வாரிய இணையதளத்தில் பதிவேற்றப்படும். மேலும், பொதுமக்கள் தங்கள் பயன்படுத்தும் குடிநீரினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கட்டணமில்லாமல் பரிசோதனை செய்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்