From tomorrow, the meeting of the Grievance Redressal day; Direct petitions will be received at the taluka level: Perambalur Collector Srivenkatapriya Information

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, தமிழக அரசின் உத்தரவின்படி, மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் தனி பெட்டி வைக்கப்பட்டு அதன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்தனால் கொரோனா வைரஸின் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது.

பொதுமக்களின் நலன் கருதி, பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் வட்ட அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ந.சக்திவேல் தலைமையிலும், பெரம்பலலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதி திராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் சி.கிறிஸ்டி தலைமையிலும், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையாளர் (கலால்) அ.ஷோபா தலைமையிலும், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.ரமணகோபால் தலைமையிலும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் நடைபெற உள்ளது. காலை 10.30மணி முதல் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும்.

பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கவனமாக பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினை கடைபிடித்து மனுக்களை பாதுகாப்பான முறையில் அளித்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!