Full Curfew on Sundays throughout July in Perambalur District; Collector V. Santha
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 05.07.2020 அன்று காலை 6.00 மணி முதல் 06.07.2020 காலை 6.00 மணிவரை 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஜுலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பணி நிமித்தம் செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் ;மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கிருமிநாசினி தெளித்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடா;ந்து மேற்கொள்வதோடு அனைவரும் தத்தமது இல்லங்களில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.
மேலும் மக்களிடையே சமூக இடைவெளி என்பது இந்த நேரத்தில் மிகவும் அவசியமாகும். இந்த முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் திரிவோர் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.
முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள் மற்றும் மருத்துவ மனைகள் மட்டுமே செயல்படும். முழு ஊரடங்கு காலத்தில் கடைகளை திறந்து வர்த்தகம் செய்வோரின் கடைகளுக்கு சீல் வைத்து குற்றவழக்கு பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து தங்களை காத்துக் கொள்வதோடு அரசின் கொரோனா நோய் தொற்று தடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.