Funding the production and staging of new prom-plays; Perambalur Collector (I) C. Rajendran Information

பெரம்பலூர் கலெக்டர் (பொ) சி.ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டியங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்கை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 2019-2020ஆம் ஆண்டிற்கான, தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள், கலைக் குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் பெறவும், நிபந்தனைகள் பற்றி தெரிந்துகொள்ள 044- 2493 7471 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும், மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவ.30 அன்று மாலை 05.00 மணிக்குள் உறுப்பினர் – செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!