Gaja storm damage during calibration of the deceased employee’s family Rs 2 lakh compensation: Presented By Minister Thangamani

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்விநியோக சீரமைப்பு பணிமேற்கொண்டபோது உயிரிழந்த மல்லசமுத்திரத்தை சேர்ந்த நடராஜன் என்ற பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மின்விநியோக சீரமைப்பு பணிகளை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்விநியோக சீரமைப்பு பணிமேற்கொண்ட, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, மல்லசமுத்திரம் மேல்முகம் கிராமத்தை சார்ந்த சேர்ந்த நடராஜன் என்பவர் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அவரதுகுடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் நிவாரண உதவி அளிக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், உயிரிழந்த மின்வாரிய ஊழியர் நடராஜனின் தந்தை சின்னானிடம் ரூ.2 லட்சம் நிவாரணத்தொகைக்கான செக்கை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி அவரது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது;

கஜா புயலின் பாதிப்பால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில் மின் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மின்பணியாளர்களை வரவழைத்து அங்கு மின்விநியோகத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் மின்விநியோக சீரமைப்பு பணிகளில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சார்ந்த முருகேசன் என்பவரும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பணியாற்றும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தியுடன் முருகேசனின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக ரூ.2 லட்ச ரூபாய் மற்றும் விரைவில் ரூ.13 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மின்வாரிய பணியாளர்கள் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்த முதல்வர் பணியின்போது இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். மேலும், இறந்த முருகேசனின் குடும்பத்தில் ஒருவருக்கு மின்வாரியத்தில் பணி வழங்கப்படும்.

கஜா புயலினால் மக்களுக்கு அதிகம் பாதிப்பு என்றால், இரண்டாவதாக மின்சார வாரியத்திற்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1,13,000 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 4 மாவட்டங்களிலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தற்போது மின்விநியோகம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கிராமப்பகுதிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. புயலினை தாக்கத்தை எதிர்பார்த்து ஏற்கனவே 70,000 மின்கம்பங்கள் தயாராக வைத்திருந்தோம். இப்போது 1 லட்சத்துக்கும் அதிகமாக மின் கம்பங்கள் சேதமடைந்ததால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

மின்கம்பங்களோ, மின்சாதனங்களோ, மின்மாற்றிகளோ பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை. தமிழக முதல்வர் தலைமையில் இதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்றால் கூட 100 கம்பங்கள் போட்டுதான் கொடுக்க வேண்டி இருக்கின்றது. வயல்வெளிகளில் கழுத்தளவு தண்ணீர் நிற்கின்றது. இந்த நிலையிலும் மின்வாரிய பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மின்சீரமைப்பு பணிகளில் 22,000 பணியாளர்களை ஈடுபடுத்தி இருக்கின்றோம்.

ஆந்திராவில் இருந்து 800 பணியாளர்கள் வந்திருக்கின்றனர். கேரளாவில் இருந்து 500 பணியாளர்கள் வந்திருக்கின்றனர். கர்நாடகாவில் இருந்து 600 பணியாளர்களை அனுப்பி இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் பயன்படுத்தி முழுவீச்சில் பணிகள் நடபெற்று வருகிறது. தமிழக முதல்வர் பாரதப்பிரதமரை சந்தித்தபோது ரூ.15,000 கோடி அளவிற்கு சேதமடைந்துள்ளது, முதற்கட்டமாக ரூ.1,500 கோடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதிலும் மின்சார வாரியத்தை பொறுத்த அளவில் ரூ.1,500 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.200 கோடி கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், நாமக்கல் எம்.பி சுந்தரம், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன் சரஸ்வதி, மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!