Gaja storm impact should be announced as national disaster: KMDK General Sec. ER. Eswaran urges

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிப்பதுடன் மத்திய குழு நேரில் பார்வையிட வேண்டும் எனகொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இரண்டாம் உலக தமிழ் மாநாடு வரும் வரும் பிப்ரவரி 3 ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

கஜா புயல் பாதிப்பு குறித்த தாக்கம் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை. புயல் பாதிப்பை ஊடகங்கள் உலகளவில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக வீடுகள், பயிர்கள், தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதாது.

அரசின் செயல்பாடுகள் வேகமாக இருக்க வேண்டும். அவசரகாலத்திற்கு தான் இந்த இழப்பீடு அறிவித்துள்ளது. முழுமையாக மீட்டெடுக்க அதிகமான இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும், அதே நேரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இந்நேரம் மத்திய குழு தமிழகத்திற்கு வந்திருக்கும். அப்போது தான் அதிக நிதி பெறமுடியும். பாரப்பட்சம் பார்க்காமல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மக்கள் கோபமாக இருப்பதனை கருத்தில் கொண்டு தமிழகபாஜக சார்பில் குழு அமைத்திருப்பது ஒரு பிரோஜனமும் கிடையாது, இது தீர்வாகாது. புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிப்பதுடன் உடனடியாக மத்திய குழு பார்வையிட வேண்டும். சபரிமலை வழக்கு தீர்ப்பில் ஒரு உள்நோக்கம் உள்ளது. சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பு தவறு என்றும் கேரள அரசு மறு சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த 3 பேரையும் விடுதலை செய்தது யாராலும் ஏற்று கொள்ள முடியாது. விடுதலை செய்தது தவறு , இதனை எந்த பெற்றோர்களும் மன்னிக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!