Gaja Storm relief fund on behalf of the Association of Poultry, 40 lakh to the Chief Minister of Supply
கஜா புயல் நிவாரண நிதியாக கோழிப்பண்ணையாளர்கள் சார்பில் ரூ.40 லட்சம் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பாக முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது.
சங்க தலைவர் சின்ராஜ், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் சென்னை சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ரூ.40 லட்சம் நிவாரண நிதிக்கான பேங்க் டிராப்ட்பை வழங்கினார்கள். கஜா புயலுக்கான நிதி வழங்கிய கோழிப்பண்ணையாளர்களுக்கு சங்கத்தலைவர் சின்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.