Games for SC and ST students
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் மார்ச் 22 அன்று பெரம்பலூh; மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது –
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல் :
2016-2017-ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 22 அன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதில் குழுவிளையாட்டுப் போட்டிகளில் கோ-கோ, கபாடி, கையுந்துப்பந்து, வளையப்பந்து, எறிபந்து, இறகுப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் 100மீ, 200மீ, 400மீ ஆகிய ஓட்டப் போட்டிகளும், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 400மீ தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் இருபாலருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவர்.
எனவே, பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.