Gandhi Memorial Day; Perambalur District DMK On behalf of the acceptance of the pledge of religious harmony!
காந்தியை இழிவுபடுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் – தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தன் பேரில், காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், எம்.எல்.ஏ பிரபாகரன் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்தது.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வீ.ஜெகதீசன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், நகராட்சி உறுப்பினர்கள் சித்தார்த் , நல்லுசாமி, தங்க.சண்முகசுந்தரம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன், கம்யூனிஸ்ட் கட்சி செல்லதுரை உள்ளிட்ட தோழமைக்கட்சியினர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: