Gandhi Memorial Day; Under the leadership of the Collector in Perambalur, taking the pledge to end untouchability!
காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை கலெக்டர் கற்பகம் வாசிக்க, அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
“இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் / குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்”, என உறுதிமொழி அனைத்துத்துறை அலுவலர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூறும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: