பெரம்பலூர் : புதுடில்லி பார்லிமென்ட் வளாகத்தில் எம்ஜிஆர் சிலை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா தான் என பெரம்பலூர் அதிமுக பொதுக் கூட்டத்தில் எம்.பி., குமார் பேசினார்.
பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 99வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ராஜபூபதி தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் ரமேஷ், இணைச் செயலாளர் எழிலரசி, நகர துணைச் செயலாளர்கள் சுப்ரமணியன், நீலா சேகர், நகர பொருளாளர் ஜெகதீஸ்வரன், மோகன், ராஜா, சிவக்குமார், தனலட்சுமி, மாவட்டப் பிரதிநிதிகள் ஆனந்தராஜ், சேகர், லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம், எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், கட்சிபேச்சாளர் சங்கரதாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி எம்பி குமார் கலந்து கொண்டு பேசுகையில், 20ம் நுõற் றாண்டில் வாழ்ந்து மறைந்த வாழ்ந்து கொண்டிருக்கிற சாதனை தலைவர்களில் எம்ஜிஆர் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகிறார். அவ ரது வாரிசு என ஜெயலலிதா பல சாதனைகளைச் செய்து நிரூபித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் காந்தி, நேரு, பட்டேலைப் போல தென்னிந்தியாவில் அண்ணாவைப்போல, 2007ம் ஆண்டில் எம்ஜிஆருக்கும் சிலை வைக்க ஏற்பாடு செய்தவர் ஜெயலலிதா தான். இரண்டாக உடைந்த கிடந்த அதிமுகவை ஜெயலலிதாவால் தான் ஒன்று சேர்க்க முடிந்தது.
அதிமுகவை இந்தியாவின் 3வது மிகப்பெரிய கட்சியாக உருவாக்க முடிந்தது. 1972ம் ஆண்டில் உருவான அதிமுகவால் 37 எம்பிக்களை பெற ஜெயலலிதா ஒருவர் தான் காரணம். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களைக் கொண்டு ரூ.2.40 லட் சம் கோடி முதலீடு செய்யக் காரணமும் அவர் தான். பாமக இன்று மாற்றம் முன்னேற்றமென ஒபாமாவைக் காப்பியடிக்கிறது. காந்தி,நேருவை நம்பியிருந்த காங்கிரஸ் இன்று நக்மா, குஷ்புவை நம்பியுள்ளது என்றார்.
இதில் ஒன்றிய செயலாளர் கர்ணன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், கார்த்திகேயன், செல்வகுமார், வக்கீல் குலோத்துங்கன், வீரபாண்டியன், குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், அரனாரை வைஸ்மோகன்ராஜ், சங்கு சரவணன், கூட்டுறவுவீட்டுவசதி சங்க துணைதலைவர் முகமதுஇக்பால்,மைதிலி, ராணி, லெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொன்னுவேல் வரவேற்றார். வார்டுசெயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.