Gandhi’s birthday on behalf of the District Congress, Kamaraj Memorial Day
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தலைவர் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாள் விழா மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்து காந்தி மற்றும் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் நகர கமிட்டி தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். காந்திபுரம் சோமு, முன்னாள் சேந்தை காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேந்தை முன்னாள் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் நவநீதன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ஷேக் நவீத் பங்கேற்று காந்தி மற்றும் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சேந்தை வட்டார தலைவர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ராணி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வி, முன்னாள் மாநில மாணவர் காங்கிரஸ் டாக்டர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
நாமக்கல் நகர துணைத்தலைவர் குப்புசாமி, எருமப்பட்டி வட்டார தலைவர் சுந்தரம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராசிபுரம் சிவக்குமார், நாமக்கல் டெங்கடேஷ், முன்னாள் நாமக்கல் நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சேந்தை சுபாஷ் நன்றி கூறினார்.